அடுக்குமாடி குடியிருப்பில் தகராறு: ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர், பெண் வக்கீல் மீது வழக்கு

போரூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் தகராறில் ஈடுபட்ட பெண் வக்கீல் மற்றும் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

போரூர்:

மேற்கு மாம்பலம் பாலகிருஷ்ணன் நாயக்கர் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பக்தவச்சலம். ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவர் அடுக்குமாடி குடியிருப்பு சங்க செயலாளராக இருந்து வந்தார். இதே குடியிருப்பில் வசித்து வருபவர் சீதாலட்சுமி. உயர்நீதிமன்ற வழக்கறிஞர்.

நேற்று முன்தினம் அங்குள்ள அறிவிப்பு பலகையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் தேசிய கொடி ஏற்றப்படும் என்று எழுதி வைத்தார்.

இதை கண்ட சீதாலட்சுமி கடந்த மாதம் குடியிருப்போர் சங்க நிர்வாகம் கலைக்கப்பட்ட நிலையில் அறிவிப்பு பலகையில் பக்தவச்சலம் எழுதியதை அழித்தார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இதுகுறித்து இருவரும் அசோக் நகர் போலீசில் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்தனர். இதையடுத்து 2 பேர் மீதும் அசோக்நகர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com