திருமங்கலம் அருகே மைனர் பெண்ணுக்கு கட்டாய திருமணம்: பெற்றோர் மீது வழக்கு

திருமங்கலம் அருகே மைனர் பெண்ணுக்கு கட்டாய திருமணம் நடத்தியதாக பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கு
வழக்கு
Published on

பேரையூர்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மேலஉரப்பனூரைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது 17 வயது மகளுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அர்ஜூன் மகன் நாகராஜ் (24) என்பவருக்கும் கடந்த 1-ந்தேதி திருமணம் நடந்தது.

இந்த நிலையில் இந்த திருமணத்துக்கு 17 வயது பெண்ணை கட்டாயப்படுத்தியதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

இதையடுத்து திருமணம் நடந்த அன்றே மேலஉரப்பனூர் சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தி மைனர் பெண்ணை மீட்டனர். அவர் மதுரை முத்துப்பட்டியில் உள்ள காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

மைனர் பெண்ணை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததாக மாவட்ட குழந்தைகள் சமூக நல அலுவலர் விஜயசரவணன் திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் மைனர் பெண்ணின் பெற்றோர் பிரகாஷ்-லோகமணி, சகோதரி பிரியா, மணமகன் நாகராஜ் உள்பட உறவினர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com