அய்யம்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேர் மீது வழக்கு பதிவு

சென்னையில் தடியடி நடத்திய போலீசாரை கண்டித்து அய்யம்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

அய்யம்பேட்டை:

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 14-ந் தேதி போராட்டம் நடந்தது. அப்போது போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து போலீசாரை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அய்யம்பேட்டை கோவிலடி பஸ் நிறுத்தம் பகுதியில் முஸ்லிம்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதில் கலந்துகொண்ட அய்யம்பேட்டை முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் எஸ்.பி.ஜே. முபாரக், சக்கராப்பள்ளி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நாசர், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில வர்த்தக பிரிவு செயலாளர் யூசுப் ராஜா உள்பட 50 பேர் மீது அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகால் சோழன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com