சென்னையில் இருந்து போலி இ-பாஸ் மூலமாக வந்த 3 பேர் மீது வழக்கு

சென்னையில் இருந்து போலி இ-பாஸ் மூலமாக காரில் வந்த 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்குப்பதிவு
வழக்குப்பதிவு
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அழகாபுரி சோதனைச்சாவடியில் 24 மணி நேரமும் போலீசாரும், வருவாய்துறையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் சென்னையில் இருந்து மதுரை வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் செல்ல ஒரு கார் வந்தது.

அந்த காரில் 3 பேர் இருந்தனர். அந்த காரை, அதிகாரிகள் மறித்து அவர்களிடம் இ-பாஸ் உள்ளதா என சோதனை செய்தனர். அப்போது அவர்கள் போலி இ-பாசை பயன்படுத்தியது தெரியவந்தது. இதுகுறித்து நத்தம்பட்டி போலீசார், காரில் வந்த 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com