கள்ளப்பெரம்பூர் அருகே மது விற்ற 2 பேர் மீது வழக்கு

கள்ளப்பெரம்பூர் அருகே மது விற்ற 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

கள்ளப்பெரம்பூர்:

தஞ்சை அருகே உள்ள மருங்குளம் நான்கு ரோடு சந்திப்பில் வல்லம் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து 2 பேர் விற்பனை செய்து வந்தனர். அதில் ஒருவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடி விட்டார். 

மற்றொரு நபரான கருக்காக்கோட்டையை சேர்ந்த சித்ரவேல் (வயது 46) என்பவர் மீது வல்லம் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவரிடம் இருந்த 10 மதுபாட்டில்களை போலிசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com