சரவணம்பட்டியில் காரில் அழகிகளை வைத்து விபசாரம்- புரோக்கர் கைது

கோவை சரவணம்பட்டி பகுதியில் காரில் அழகிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபட முயன்ற புரோக்கர் கைது செய்யப்பட்டார்.
சரவணம்பட்டியில் காரில் அழகிகளை வைத்து விபசாரம்- புரோக்கர் கைது
Published on

கோவை:

கோவை சரவணம்பட்டி பகுதியில் காரில் அழகிகளை வைத்து அப்பகுதியில் செல்லும் வாலிபர்களை விபசாரத்திற்கு அழைப்பதாக சரவணம் பட்டி போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு கார் நின்றது. அதில் இரு அழகிகள் இருந்தனர். காருக்கு வெளியே ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

அவரை பிடித்து விசாரித்த போது அவர் விபசார புரோக்கர் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.விசாரணையில் அவரது பெயர் செல்வராஜ் (42) திண்டுக்கல்லை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. கார் டிரைவர் கீரணத்தத்தை சேர்ந்த ஜெயராஜ் (33) ஆவார். அவரும் கைது செய்யப்பட்டார். காரில் இருந்த அழகிகள் ராமநாதபுரம், ஆந்திராவை சேர்ந்தவர்கள். அவர்கள் மீட்கப்பட்டு கோவையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். பண ஆசை காண்பித்து விபசார அழகிகளை புரோக்கர் அழைத்து வந்தது தெரியவந்தது.

புரோக்கரிடம் இருந்து 7 செல்போன், ரூ. 4 ஆயிரத்து 350 ரொக்கப்பணம், பறிமுதல் செய்யப்பட்டது. காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவை பீளமேட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் விபசார பெண் புரோக்கர் சாவித்திரியை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த முருகனும் கைது செய்யப்பட்டார். புரோக்கர் சாவித்திரி விபசாரத்திற்கு பயன்படுத்திய 2 அழகிகள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com