திருமங்கலம் அருகே கார் மீது லாரி மோதல்- வாலிபர் பலி

திருமங்கலம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
திருமங்கலம் அருகே கார் மீது லாரி மோதல்- வாலிபர் பலி
Published on

பேரையூர்:

நெல்லை மாவட்டம், ஏர்வாடி அருகேயுள்ள புளியஞ்சுவனத்தைச் சேர்ந்தவர் ஷேக் முகமது (வயது 36). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த தமிமுன் (36) என்பவரும் மதுரைக்கு காரில் புறப்பட்டனர்.

நள்ளிரவு 1 மணி அளவில் திருமங்கலத்தை அடுத்த சிவரக்கோட்டையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது காரின் டயர் பஞ்சரானது. இதனால் காரை சாலையோரமாக நிறுத்தி டயரை கழற்றிக் கொண்டிருந்தனர்.

அப்போது விருதுநகரில் இருந்து திருமங்கலம் நோக்கி வந்த லாரி எதிர் பாராத விதமாக கார் மீது மோதியது.

இந்த விபத்தில் ஷேக் முகமது சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். தமிமுன் படுகாயமடைந்தார். அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சுப்பையாவை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com