காங்கயத்தில் கார் மீது லாரி மோதி சப்-இன்ஸ்பெக்டர் காயம்

காங்கயத்தில் கார் மீது லாரி மோதி சப்-இன்ஸ்பெக்டர் காயம் அடைந்தார். இது சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காங்கயத்தில் கார் மீது லாரி மோதி சப்-இன்ஸ்பெக்டர் காயம்
Published on

வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்டம் அவினாசி பாளையம் போலீசில் சப்-இன்ஸ் பெக்டராக வேலை பார்த்து வருபவர் முருகானந்தம் (55). இவர் வெள்ளகோவில் போலீஸ் குடியிருப்பில் குடியிருந்து வருகிறார்.நேற்று இரவு பணி முடிந்து சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தனது காரில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். இன்று காலை 6.45 மணியளவில் கோவை-கரூர் சாலையில் காங்கயத்தில் உள்ள தனியார் பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த லாரி கார் மீது மோதியது. விபத்து ஏற்பட்டதும் காரில் இருந்த பலூன் விரிந்ததால் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் லேசான காயத்துடன் தப்பினார். அவர் காங்கயம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை காங்கயம் டி.எஸ்.பி. செல்வம் பார்த்து விபத்து குறித்து கேட்டறிந்தார். இது குறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com