கார் மீது லாரி மோதல்: சேலம் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் படுகாயம்

வாணியம்பாடி அருகே கார் மீது லாரி மோதியதில் சேலம் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
கார் மீது லாரி மோதி நிற்கும் காட்சி.
கார் மீது லாரி மோதி நிற்கும் காட்சி.
Published on

வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சீபுரத்தில் இருந்து ஒரு கார் சேலத்தை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. வாணியம்பாடியை அடுத்த பெருமாள்பேட்டை என்ற இடத்தில் கார் வரும்போது, அந்த வழியாகப் பின்னால் வந்த ஒரு லாரி வளைவில் முந்தியபோது, திடீரென கார் மீது மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சேலம் நில அபகரிப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகமையன் (வயது 50) உள்பட அவருடைய குடும்பத்தினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் காரில் இருந்து உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக லாரி டிரைவரை வாணியம்பாடி போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com