ஆரணி அருகே கார்-லாரி மோதி டிரைவர் பலி

ஆரணி அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் நொறுங்கிய கார்.
விபத்தில் நொறுங்கிய கார்.
Published on

ஆரணி:

ஆரணி அருகே திருவண்ணாமலை அடுத்த விழுகந்தலையை சேர்ந்த பொன்னுசாமி மகன் முருகன் (வயது 37) டிரைவர். இவர் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார்.

இன்று காலை காவேரிப்பாக்கத்தில் இருந்து 2 பேரை காரில் ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

ஆரணி அடுத்த கீழ்அய்யம்பேட்டை என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திருவண்ணாமலையில் இருந்து ஆரணி நோக்கி வந்த லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி கொண்டன.

இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். லாரி சாலையோரம் கவிழ்ந்தது. கார்-லாரியில் வந்தவர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்த களம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் இறந்த முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com