தர்மபுரியில் தீப்பிடித்த கார்- அதிர்ஷ்டவசமாக 4 பேர் உயிர்தப்பினர்

தர்மபுரி நான்கு ரோடு அருகே சென்று கொண்டிருந்த கார் தீடீரென தீ பிடித்தது. காரில் இருந்த 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கார் தீப்பிடித்து எரிந்து நிற்கும் காட்சி.
கார் தீப்பிடித்து எரிந்து நிற்கும் காட்சி.
Published on

தர்மபுரி:

சேலம் மாவட்டம் தாதம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன். நேற்று அவரது காரில் தங்கள் ஊருக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் தர்மபுரி நான்கு ரோடு அருகே வந்த போது திடீரென கார் தீ பிடித்தது. இதனால் அதிர்ச்சியான சரவணன் காரிலிருந்து இறங்கினார். மேலும் காரில் இருந்த மற்ற 3 பேரையும் இறங்க சொன்னார். இதனால் அதிர்ஷ்டவசமாக சரவணன் உள்பட 4 பேர் உயிர் தப்பினர். 

இதுகுறித்து தகவலறிந்த தர்மபுரி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சிறிதுநேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com