திருத்தங்கல்லில் தலையில் கல்லைப்போட்டு கார் டிரைவர் கொலை

திருத்தங்கல்லில் மது தகராறில் டிரைவர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டார்.
திருத்தங்கல்லில் தலையில் கல்லைப்போட்டு கார் டிரைவர் கொலை
Published on

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் சரசுவதி நகரைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது50), கார் டிரைவர்.

இவர் சனிக்கிழமை இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் அவரை தேடினர்.

இந்த நிலையில் அந்த பகுதியில் கருப்பையா ரத்தக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனை கண்ட உறவினர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் விரைந்து வந்து கருப்பையா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

சனிக்கிழமை இரவு கருப்பையா மது அருந்திய போது அதே பகுதியைச் சேர்ந்த அச்சக தொழிலாளி சுடலை அங்கு வந்துள்ளார். மது அருந்தும்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் கருப்பையா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக சுடலையை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com