சீர்காழியில் கார் டிரைவர் அடித்து கொலை: கணவன்-மனைவி கைது

சீர்காழியில் குடிநீர் குழாய் அமைத்தது தொடர்பாக முன்விரோத தகராறில் கார் டிரைவரை அடித்து கொலை செய்த கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.
கொலை
கொலை
Published on

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிதுரை (வயது45) கார் டிரைவர். இவரது மனைவி ஜெயக்கொடி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம்(40).இவரது மனைவி ராஜேஸ்வரி(36). இருதரப்பினருக்கும் இடையே குடிநீர் குழாய் அமைத்தது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், சாமிதுரையிடம் கோபித்துக் கொண்டு, தனது தங்கை வீட்டுக்க ஜெயக்கொடி சென்று விட்டார். இதனால் வீட்டில் 2 குழந்தைகளை வைத்துக் கொண்டு சிரமப் பட்ட சாமிதுரை, நேற்று தன்மனைவியை திட்டிக் கொண்டிருந்தார்.

இதைக் கேட்ட ராஜேஸ்வரி, தன்னைத் தான் சாமிதுரை திட்டுவதாக நினைத்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, சாமிதுரை தன் வயலுக்குச் சென்றுவிட்டார். பின்னர், அவர் வயலில் இருந்து திரும்பிய போது சண்முகமும், ராஜேஸ்வரியும் அவரை வழிறித்து தாக்கினர். இதில், சண்முகம் கத்தியால் குத்தியதில் சாமிதுரை படுகாய மடைந்தார். உடனே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சாமிதுரை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இது குறித்து பாகசாலை போலீசார் வழக்குபதிவு செய்து சண்முகம், ராஜேஸ்வரி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com