திருமணம் ஆன 4 மாதத்தில் மனைவி பிரிந்து சென்றதால் கார் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

மனைவி பிரிந்து சென்றதால் வேதனை அடைந்த கார் டிரைவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சேதராப்பட்டு:

புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் மோசார் வீதியை சேர்ந்தவர் முகமது யூசுப். இவரது மகன் தியாகுல் ஹக் என்ற ராஜா (வயது 34), கார் டிரைவர். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவரது மனைவி பாத்திமா பீவி திருமணம் ஆன 4 மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக தியாகுல் ஹக்கை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

இதனால் தியாகுல் ஹக் தனது அண்ணன் காதர் மஸ்தான் குடும்பத்துடன் வசித்து வந்தார். இதற்கிடையே மனைவி பிரிந்து சென்றதால் தியாகுல் ஹக் சோகத்துடன் இருந்து வந்தார். வேதனையில் அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மனைவி பிரிந்து சென்றதால் வேதனை அடைந்த தியாகுல் ஹக் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com