மனைவியுடன் தகராறு- கார் டிரைவர் தற்கொலை

புதுவை அருகே மதுகுடித்து விட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மனைவியுடன் தகராறு- கார் டிரைவர் தற்கொலை
Published on

புதுச்சேரி:

புதுவை கோவிந்தசாலை அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 44). இவரது மனைவி ராஜேஸ்வரி (39).இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

ராஜேந்திரன் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு மதுகுடிக்கும் பழக்கமும் இருந்தது. இதை கண்டிப்பதால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

சில நாட்களுக்கு முன்பு இதேபோல் தகராறு ஏற்பட்டதால் மனைவியுடன் கோபித்து கொண்டு ராஜேந்திரன் அரும்பார்த்தபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அங்கேயே சில நாட்கள் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று மதுகுடித்து விட்டு கோவிந்தசாலையில் உள்ள வீட்டுக்கு வந்தார். அப்போதும் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அவரை வீட்டுக்குள் விட மறுத்தனர்.

பின்னர் சமாதானம் அடைந்து வீட்டுக்குள் அனுமதித்தனர். அங்கு ஒரு அறையில் அவர் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். திடீரென அவர் மனைவியின் சேலையால் தூக்கு மாட்டி தொங்கினார்.

சத்தம் கேட்டு உள்ளே சென்ற மனைவி மற்றும் குடும்பத்தினர் அவரை தூக்கில் இருந்து இறக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே இறந்து விட்டார்.

இதுகுறித்து உருளையன் பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com