நாங்குநேரி அருகே போதையில் கார் ஓட்டியவர் கைது

நாங்குநேரி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போதையில் கார் ஓட்டி வந்தவரை கைது செய்தனர்.
கைது
கைது
Published on

களக்காடு:

நாங்குநேரி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் தட்டான்குளம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் அதிவேகமாகவும், சாலையில் அங்கும், இங்குமாக போக்குவரத்திற்கு இடையூறாகவும் வந்தது. அந்த காரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். 

இதில் காரை ஓட்டி வந்த ஆனைகுளத்தை சேர்ந்த சேர்மதுரை (வயது41) என்பதும் அவர் மது போதையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com