

ஏடன்:
ஏமன் நாட்டின் ஏடன் பகுதியில் உள்ள கோர் மஸ்கார் மாவட்ட அரசு அலுவலகம் மீது தீவிரவாதிகள் இன்று கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் பலர் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலை அல்-கொய்தா தீவிரவாத அமைப்பு நடத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.