

டமாஸ்கஸ்:
சிரியாவில் குர்திஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தல் அப்யாட் பகுதியை துருக்கி படையெடுத்து தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.
துருக்கியின் எல்லையோரம் அமைந்துள்ள இப்பகுதியில் குர்திஷ் போராளிகள் , ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இந்நிலையில், தல் அப்யாட் பகுதியில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ஒரு கார் இன்று திடீரென வெடித்து சிதறியது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளதாக சிரியாவுக்கான மனித உரிமைகள் கண்காணிப்பகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த கார் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை .