சிரியா: கார்குண்டு வெடிப்பில் 19 பேர் உயிரிழப்பு

சிரியா நாட்டின் வடபகுதியில் இள்ள அல்-பாப் நகரில் இன்று கார் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமடைந்தனர்.
குண்டு வெடிப்பில் உருக்குலைந்த கார்
குண்டு வெடிப்பில் உருக்குலைந்த கார்
Published on

துருக்கி நாட்டு எல்லையோரத்தில் உள்ள சிரியா நாட்டின் வடக்கு பகுதியான அலெப்போ மாகாணத்துக்குட்பட்ட அல்-பாப் நகரில் பேருந்து நிறுத்தத்தின் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு கார் இன்று பயங்கரமாக வெடித்துச் சிதறியது.

இந்த சம்பவத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 30-க்கும் அதிகமானவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக சிரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com