ஆலங்குளம் அருகே கார்-பைக் மோதல்: வாலிபரின் கால் முறிந்தது

ஆலங்குளம் அருகே கார்-பைக் மோதிய விபத்தில் வாலிபரின் கால் முறிந்தது. காரை ஓட்டிநந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலங்குளம் அருகே கார்-பைக் மோதல்: வாலிபரின் கால் முறிந்தது
Published on

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே ஆண்டிப்பட்டி காட்டூரை சேர்ந்த தர்மர் மகன் ராமலிங்கம்(25). கூலி தொழிலாளியான இவர் பைக்கில் ஆலங்குளம்-தென்காசி சாலையில் வந்து கொண்டிருந்தார். ஆலங்குளம் காவலர் குடியிருப்பு அருகே வந்தபோது எதிரே வந்த கார் ராமலிங்கம் பைக் மீது மோதியது. இதில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. 

இதையடுத்து காயமடைந்த ராமலிங்கத்தை 108 ஆம்புலன்சில் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காரை ஓட்டிவந்த ஆவுடையானுரை சேர்ந்த முருகன் என்பவரை பிடித்து ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com