மேலூர் 4 வழிச்சாலையில் கார்- ஆட்டோ மோதல்

மேலூர் 4 வழிச்சாலையில் ஆட்டோ மீது கார் மோதியது. இதில் ஆட்டோ டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஆட்டோ மீது கார் மோதி நிற்பதை படத்தில் காணலாம்.
ஆட்டோ மீது கார் மோதி நிற்பதை படத்தில் காணலாம்.
Published on

மேலூர்:

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் மேலூரில் பயணிகளை இறக்கிவிட்டு வெற்று ஆட்டோவுடன் மதியம் 12 மணியளவில் மதுரை திரும்பி கொண்டிருந்தார்.

மேலூரில் இருந்து மதுரை நான்கு வழிச்சாலை இணையும் இடத்தில் சாலையை கடக்க முயன்றபோது திருச்சியில் இருந்து நெல்லை நோக்கி சென்ற கார் ஒன்று அந்த ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் காரின் முன் பகுதி சேதம் அடைந்தது.

ஆட்டோ கவிழ்ந்து அதிர்ஷ்டவசமாக காயமின்றி ஆட்டோ டிரைவர் உயிர் தப்பினார். மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர்சாமி விபத்து மீட்பு பணிகளை மேற்கொண்டார். டிரைவர்கள் சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடித்து இதுபோன்ற விபத்துகளை தவிர்த்திட வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com