அம்பையில் கார் மோதி இளம்பெண் பலி

அம்பையில் கார் மோதி இளம்பெண் பரிதாபமாக உயிரிந்தார். இந்த சம்பவம் தொடர்பாக டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்து
விபத்து
Published on

கல்லிடைகுறிச்சி:

கல்லிடைகுறிச்சி அருகே உள்ள ஜமீன்சிங்கப்பட்டி ஆசாரிமார் தெருவை சேர்ந்தவர் முருகேசன்(வயது 30). இவரது மனைவி காசியம்மாள்(23). இவர்களுக்கு 1 1/2 வயதில் மித்ரன் என்ற ஆண் குழந்தை உள்ளது. நேற்று மாலை முருகேசன் தனது மனைவி, குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் அம்பையில் உள்ள வாரச்சந்தைக்கு சென்றார். அவர்கள் அங்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அம்பை தாலுகா அலுவலகம் அருகில் சென்றபோது காருக்குறிச்சியில் இருந்து பொட்டல்புதூருக்கு சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட காசியம்மாள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவருடைய கணவரும் குழந்தையும் லேசான காயம் அடைந்தனர். 

உடனே அக்கம் பக்கத்தினர் காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே காசியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த முருகேசன், குழந்தை மித்ரன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்தனர். பின்னர் காரை ஓட்டி வந்த காருக்குறிச்சி செட்டி பிள்ளைமார் தெருவை சேர்ந்த பொன்னம்பல ராஜா (47) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com