கார் மோதிய விபத்தில் ஆசிரியை பலி- டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

கிருஷ்ணகிரியில் கார் மோதிய விபத்தில் ஆசிரியை பலியானார். இந்த வழக்கில் டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
சிறை தண்டனை
சிறை தண்டனை
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி, சேலம் சாலையை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி மஞ்சுலட்சுமி(34). இவர் சுண்டம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி பள்ளி பணியை முடித்துவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுண்டம்பட்டி வளைவு பகுதியில் கிருஷ்ணகிரிக்கு வர திரும்பினார். அப்போது சென்னையில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட ஆசிரியை மஞ்சுலட்சுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.

இந்த விபத்து குறித்து அப்போதைய கந்திகுப்பம் இன்ஸ்பெக்டர் பழனிசாமி வழக்குபதிவு செய்து, கார் டிரைவரான கோவை மாவட்டம் குறிஞ்சி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன்(44) என்பவரை கைது செய்தார். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி ரவி தீர்ப்பு வழங்கினார். தனது தீர்ப்பில், கார் டிரைவரான பாலமுருகனுக்கு 2 வருட கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com