பாலையம்பட்டியில் கார் டயர் வெடித்து விபத்து- ஆசிரியை பலி

பாலையம்பட்டியில் கார் டயர் வெடித்து லாரி மீது மோதிய விபத்தில் பெண் பலியானார். படுகாயமடைந்த அவரது கணவர் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து
விபத்து
Published on

பாலையம்பட்டி:

மதுரை அண்ணாநகர் தாசில்தார் நகரைச் சேர்ந்தவர் ஞானராஜ் (வயது 73), ஓய்வு பெற்ற பேராசிரியர். இவரது மனைவி ஜோசப் மேரி (67). ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்களது 2 மகன்கள் அமெரிக்காவில் உள்ளனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை ஞானராஜ், தனது மனைவியுடன் தூத்துக்குடி ஆலந்தூரில் உள்ள தேவாலயத்துக்கு காரில் புறப்பட்டார்.

காலை 8 மணியளவில் விருதுநகர் மாவட்டம், பாலையம்பட்டி விலக்கு மெயின்ரோட்டில் கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக கார் டயர் வெடித்தது. இதில் தாறுமாறாக ஓடிய கார் எதிர்ப்புறமாக வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது.

காரின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. அதில் பயணம் செய்த ஜோசப் மேரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த ஞானராஜ் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com