வடமதுரை அருகே கார் மோதி போலீஸ் ஏட்டு பரிதாப பலி

வடமதுரை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் போலீஸ் ஏட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
வடமதுரை அருகே கார் மோதி போலீஸ் ஏட்டு பரிதாப பலி
Published on

வடமதுரை:

வத்தலக்குண்டு அருகே உள்ள விராலிப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கிடுசாமி (வயது 50). இவர் வடமதுரை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். நேற்று திண்டுக்கல்லில் இருந்து வடமதுரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது திருச்சி நோக்கி சென்ற கார் இவர் மீது பயங்கரமாக மோதியது.

இதில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வடமதுரை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்தவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் வழியிலேயே வெங்கிடுசாமி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்றதால் வையம்பட்டி சோதனைச்சாவடியில் தகவல் தெரிவிக்கப்பட்டு அதன் எண்ணை வைத்து பிடிக்கப்பட்டது.

பின்னர் காரை ஓட்டி வந்தவரிடம் வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com