கிருமாம்பாக்கம் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதல்- 7 பேர் படுகாயம்

கிருமாம்பாக்கம் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்து
விபத்து
Published on

பாகூர்:

நாகை மாவட்டம் திருக்கடையூரை சேர்ந்தவர் ஸ்ரீராமலு (வயது 42). இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகள் பத்மஸ்ரீ (9), தர்‌ஷன் (6) ஆகியோருடன் நேற்று இரவு காரில் திண்டிவனத்துக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது காரைக்கால் கீழக்காசக்குடியை சேர்ந்த ரவிச்சந்திரன் (60). புதுவையில் இருந்து காரைக்காலுக்கு காரில் சென்றார்.

அந்த காரில் அவருடைய மனைவி ஹேமலதா (54), ரவிச்சந்திரனின் அண்ணன் ஜெயராமன் (63), அவருடைய மனைவி எழிலரசி (60) ஆகியோர் இருந்தனர்.

இரு கார்களும் கிருமாம்பாக்கம் அருகே உள்ள காட்டுக்குப்பத்தில் வந்த போது நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில், ஸ்ரீராமலு, பத்மஸ்ரீ, தர்‌ஷன், மற்றொரு காரில் இருந்த ரவிச்சந்திரன், ஹேமலதா, ஜெயராமன், எழிலரசி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விபத்து தொடர்பாக கிருமாம்பாக்கம் போக்கு வரத்து சப்-இன்ஸ் பெக்டர் ராமு, உதவி சப்- இன்ஸ்பெக்டர் பச்சையப்பன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com