பூதலூர் அருகே கார் மோதி கணவன்-மனைவி பலி

பூதலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கணவன்-மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பூதலூர் அருகே கார் மோதி கணவன்-மனைவி பலி
Published on

பூதலூர்:

பூதலூர் அருகே உள்ள தொண்டராயன்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன்(வயது 65). முன்னாள் ராணுவ வீரர். இவரும், இவரது மனைவி மனோன்மணியும்(60) மாரநேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

தொண்டராயன்பாடி மாதா கோவில் அருகே சென்றபோது எதிரில் வந்த ஒரு கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஜெயராமன் பலியானார். மனோன்மணி பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மனோன்மணியும் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகால் சோழன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். முதற்கட்ட விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய கார் பூதலூர் ஒன்றிய தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. இதையடுத்து காரை ஓட்டி வந்த டிரைவரை தேடி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com