பழனிமுருகன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் கார் மோதி பலி

காங்கயத்தில் பழனிமுருகன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் கார் மோதி பரிதாபமாக இறந்தார். காரை ஓட்டி வந்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
விபத்து
விபத்து
Published on

காங்கயம்:

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சிறைமித்தான் பாளையத்தை சேர்ந்தவர் அகிலேஷ் (வயது 16) முருக பக்தர்.

சம்பவத்தன்று இவர் பழனிமலை முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக காங்கயம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் திடீரென அகிலேஷ் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை உடன் வந்தவர்கள் சிகிச்சைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அகிலேஷ் இறந்தார். 

இது குறித்து ஊதியூர் போலீசார் வழக்குபதிவு செய்து கார் டிரைவரை தேடி வந்தனர். இந்நிலையில் காரை ஓட்டி வந்த சேலத்தில் போலீஸ்காரராக உள்ள அம்மாதுரை என்பவரை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com