திருச்செங்கோடு அருகே 2 கார்கள் மோதல்: போலீஸ் ஏட்டு உள்பட 3 பேர் பலி

திருச்செங்கோடு அருகே 2 கார்கள் மோதியதில் மதுவிலக்கு பிரிவு போலீஸ் ஏட்டு உள்பட 3 பேர் பலியானார்கள்.
திருச்செங்கோடு அருகே 2 கார்கள் மோதல்: போலீஸ் ஏட்டு உள்பட 3 பேர் பலி
Published on

திருச்சசெங்கோடு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மது விலக்கு அமல் பிரிவு ஏட்டாக இருந்தவர் செந்தில்குமார். இவர் இன்று காலை ஒரு காரில் பரமத்திவேலூரில் இருந்து திருச்செங்கோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.

இவர் வந்த காரும் குமார பாளையத்தில் இருந்து சபரி மலைக்கு சென்ற அய்யப்ப பக்தர்கள் வந்த காரும் திருச்செங்கோட்டை அடுத்த சித்தாளந்தூர் அருகே உள்ள துல்லிமேடு பகுதியில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் போலீஸ் ஏட்டு செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இன்னொரு காரில் வந்த அய்யப்ப பக்தர்கள் 2 பேர் பலியானார்கள். அவர்களின் பெயர் விவரம் தெரியவில்லை காயம் அடைந்த 2 குழந்தைகள் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com