ஆத்தூர் அருகே கார் புளியமரத்தில் மோதி தொழில் அதிபர் பலி

ஆத்தூர் அருகே 60-ம் கல்யாணம் முடித்துவிட்டு வீடு திரும்பிய தொழில் அதிபர் கார் விபத்தில் பலியானார்.
விபத்தில் சிக்கிய கார் மரத்தில் மோதி நிற்கும் காட்சி.
விபத்தில் சிக்கிய கார் மரத்தில் மோதி நிற்கும் காட்சி.
Published on

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நாகமணி சேகர் (வயது 60). ஜவுளி கடை அதிபர். இவரது மனைவி சுகந்தி (வயது 58).

தங்களது 60-ம் கல்யாணத்தையொட்டி நாகமணிசேகர் குடும்பத்துடன் காரில் திருக்கடையூர் சென்றார். அவர்களுடன் மகள்கள் பவித்ரா, துர்கா மற்றும் மருமகன்கள் சந்தோஷ்பாபு, கார்த்திக் ஆகியோரும் சென்றனர். இவர்கள் திருக்கடையூர் சென்று 60-ம் கல்யாணத்தை முடித்துவிட்டு நேற்று இரவு சொந்த ஊருக்கு புறப்பட்டனர். காரை கார்த்திக் ஓட்டினார்

இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் ஆத்தூர் அருகே கீரிப்பட்டி சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து தாறு மாறாக ஓடி ரோட்டோரம் நின்ற புளியமரத்தில் பயங்கரமாக மோதியது

இதில் நாகமணிசேகரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 5 பேரும் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து நாகமணிசேகர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த 5 பேரையும் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்த்திக் காரை ஓட்டும்போது தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது.

60-ம் கல்யாண நிகழ்ச்சியை முடித்துவிட்டு திரும்பிய தொழில் அதிபர் விபத்தில் பலியான சம்பவம் தம்மம்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com