சிலைகளை தாக்குவதால் உயர்ந்த தலைவர்களை சிறுமைப்படுத்திவிட முடியாது - பிரியங்கா காந்தி

மகாத்மா காந்தி, பாபா சாகிப் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகளை தாக்குவதால் அவர்களை யாராலும் சிறுமைப்படுத்திவிட முடியாது என பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி
Published on

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ஜலாவுன் மாவட்டத்தில் நேற்று மகாத்மா காந்தியின் காந்தியின் சிலை மீது சில மர்மநபர்கள் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தினர். உடலில் இருந்து தலைப்பகுதி நீக்கப்பட்ட நிலையில் காந்தியின் சிலை அலங்கோலப்படுத்தப்பட்டிருந்தது.

இதே மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்னர் பாபா சாகிப் அம்பேத்கர் சிலையின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

‘சிலைகளை அவமரியாதை செய்யும் கோழைகளான சமூகவிரோதிகளுக்கு இந்த நாட்டின் உயர்ந்த மக்களை இருட்டில் அவமதிப்பது ஒன்றுதான் அவர்களின் வாழ்நாள் நோக்கமாக இருக்க முடியும். இப்படி சிலைகளை தாக்குவதால் அவர்களின் உயர்வை சிறுதுளியளவுக்கும் நீங்கள் சிறுமைப்படுத்திவிட முடியாது’ என பிரியங்கா பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com