சின்னசேலம் அருகே கஞ்சா விற்றவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

சின்னசேலம் அருகே கஞ்சா விற்றவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கைது
கைது
Published on

சின்னசேலம்:

சின்னசேலம் அருகே பெரியசிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 42). இவர் தொடர்ந்து கஞ்சா விற்றுவந்தார். மேலும் இவர் மீது சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரின் குற்றசெயல்களை கட்டுப்படுத்தும் வகையில் கணேசனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் பரிந்துரை செய்தார். 

இதையடுத்து கணேசனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசாருக்கு கலெக்டர் கிரண்குராலா உத்தரவிட்டார். 

இதையடுத்து கணேசனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com