மனைவியை கொன்று விட்டு தனது தற்கொலையை பேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்பிய வாலிபர்

கம்போடியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் மனைவியை கொன்று விட்டு தனது தற்கொலையை பேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்பிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
மனைவியை கொன்று விட்டு தனது தற்கொலையை பேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்பிய வாலிபர்
Published on

போனம் பெங்கர்:

கம்போடியாவை சேர்ந்த வாலிபர் ரா சாய் ராத் (21). இவர் தனது முன்னாள் மனைவியை பள்ளியில் வைத்து கொலை செய்தார்.

பின்னர் அவரும் தற்கொலை செய்து கொண்டார். அக்காட்சியை ‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்தார். அதை கம்போடியாவில் 1 கோடியே 58 லட்சம் பேர் திகிலுடன் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

மனைவியை கொலை செய்து விட்டு அங்குள்ள ஒரு உயரமான பாலத்திற்கு ராத் செல்கிறார். அங்கிருந்து குதித்து தனது உயிரை மாய்த்து கொள்கிறார். ரத்தத்தை உரைய வைக்கும் இந்த தற்கொலை வீடியோ பார்த்த அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த வீடியோவை ‘பேஸ்புக்’ சிறிது நேரத்தில் நீக்கி விட்டது. அது குறித்து அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தற்போது நடந்துள்ள இந்த கொடூர சம்பவத்துக்கு வருந்துகிறோம். இது போன்ற வன்முறை அல்லது தற்கொலையை பேஸ்புக் எப்போதும் அனுமதிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com