தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் கால் டாக்சி டிரைவர் தற்கொலை

கோவை அருகே தொழிலில் போதிய வருமானம் இல்லாத காரணத்தாலும் கடன் பிரச்சினை காரணமாகவும் கால் டாக்சி டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

கோவை:

கோவை வடவள்ளி அருகே உள்ள கிங்ஸ் கார்டனை சேர்ந்தவர் டேவிட் ராஜ் (வயது 30). கால் டாக்சி டிரைவர்.

இவருக்கும் வினோலின் மெர்லின் (23) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன் உள்ளார். வினோலின் மேரி அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

டேவிட்ராஜிக்கு டாக்சி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.

மேலும் கடன் பிரச்சினை காரணமாகவும் அவர் சிரமப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த டேவிட்ராஜ் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி தூக்கு கயிற்றில் இருந்து தனது கணவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு டேவிட்ராஜை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் டேவிட்ராஜ் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com