பண மோசடி வழக்கு: 2 அமெரிக்க வாழ் இந்தியர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்

இந்தியாவில் உள்ள கால் சென்டர்களில் இருந்து பேசுவதுபோல் டெலிபோனில் பேசி அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக 2 அமெரிக்க வாழ் இந்தியர்கள் தங்களுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.
பண மோசடி வழக்கு: 2 அமெரிக்க வாழ் இந்தியர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்
Published on

இந்தியாவில் உள்ள கால் சென்டர்களில் இருந்து பேசுவதுபோல் டெலிபோனில் பேசி அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்க வாழ் இந்தியர்கள் 11 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்குகள் மீது அமெரிக்க கோர்ட்டில் தனித் தனியே விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவர்கள் மீது நடத்தப்பட்ட விசாரணையில் பல நூறு கோடி ரூபாய்க்கும் மேலாக பண மோசடியில் ஈடுபட்டதும் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த 11 பேரில் ஏற்கனவே 9 பேர் அமெரிக்க நீதித்துறை முன்பாக தங்களுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டனர்.

இந்த வழக்கில் நேற்றுமுன்தினம் அரிசோனா மாகாணத்தில் வசிக்கும் பவேஷ் பட்டேல்(வயது 47), இல்லினாய்ஸ் மாகாணத்தை சேர்ந்த அஸ்மிதாபென் பட்டேல்(34) ஆகிய 2 அமெரிக்க வாழ் இந்தியர்கள் தங்களுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

மோசடியில் ஈடுபட்ட 11 பேருக்கும் தண்டனை விதிக்கப்படும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. விரைவில் இவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் பற்றி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com