களக்காடு அருகே கேபிள் வயரை வெட்டிய தொழிலாளி கைது

களக்காடு அருகே கேபிள் வயரை வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.
களக்காடு அருகே கேபிள் வயரை வெட்டிய தொழிலாளி கைது
Published on

களக்காடு:

வள்ளியூரை சேர்ந்தவர் நம்பி (வயது 41). இவர் அரசு கேபிளில் உரிமம் பெற்று ராதாபுரம், நாங்குநேரி தாலுகாவில் கேபிள் டிவி விநியோகிஸ்தராக உள்ளார். களக்காடு பகுதியிலும் கேபிள் இணைப்பு வழங்கி உள்ளார். 

இந்நிலையில் கடந்த 25-ந் தேதி நம்பி கேபிள் பணிக்காக களக்காட்டிற்கு வந்த போது களக்காடு அருகே உள்ள சீவலப்பேரி பகுதியில் மேலப்பத்தையை சேர்ந்த தொழிலாளியான பால்ராஜ் மகன் ராஜாசிங் (43) மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஒருவரும் கையில் வயரை துண்டிக்க உதவும் கட்டருடன் சென்றனர். 

இதையடுத்து நம்பி அங்கு சென்று பார்த்த போது கேபிள் வயரை அவர்கள் இருவரும் துண்டித்து சேதப்படுத்தியது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 5 ஆயிரம் ஆகும். 

இதுகுறித்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி ராஜாசிங்கை கைது செய்தார். மேலும் அவருடன் வந்த அடையாளம் தெரியாத நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com