மஹாநதி நதிநீரை பங்கிட்டுக்கொள்ள தீர்ப்பாயம் அமைக்க கேபினட் கூட்டத்தில் ஒப்புதல்

சத்தீஸ்கர் - ஒரிசா இடையே பாயும் மஹாநதி நீரை பங்கிடுவதற்கு ஒரு மாதத்திற்குள் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்த நிலையில், மத்திய அமைச்சரவை அதற்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. #Cabinet
மஹாநதி நதிநீரை பங்கிட்டுக்கொள்ள தீர்ப்பாயம் அமைக்க கேபினட் கூட்டத்தில் ஒப்புதல்
Published on

புதுடெல்லி:

மஹாநதி நீரை பங்கிடுவதில் சத்தீஸ்கர் - ஒரிசா மாநிலங்களுக்கிடையே நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வந்தது. இது தொடர்பான வழக்கில் ஒரு மாதத்திற்குள் நதிநீரை பங்கிடுவதற்கு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என கடந்த ஆண்டு இறுதியில் சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இன்று கூடிய மத்திய அமைச்சரவையில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முறையில்லாத நிதி டெபாசிட் திட்டங்களை தடுக்கக் கோரும் மசோதா, சிட்பண்ட் திருத்த மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாக்கள் அடுத்த பாராளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய மந்திரி பியூஷ் கோயல் தலைமையில் இன்று நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கூட்டத்தில், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் 6 புதிய ரெயில் திட்டங்கள், நிலக்கரி ஏலத்தில் விதிமுறைகள் திருத்த மசோதா, பல ரெயில் வழித்தடங்களை மின்மயமாக்கும் பணி ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. #Cabinet #TamilNews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com