

புதுடெல்லி:
மத்திய வருவாய் துறை செயலாளராக இருக்கும் ஹஸ்முக் ஆதியா, நிதித்துறை செயலாளராக நியமிப்பதற்கு கேபினட் நியமனங்களுக்கான கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய வருவாய் அமைச்சக செயலாளராக இருப்பவர் ஹஸ்முக் ஆதியா. மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட்டதில் இவரது பங்கு அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஹஸ்முக் ஆதியாவை நிதி அமைச்சக செயலாளராக நியமிப்பதற்கு கேபினட் நியமனங்களுக்கான கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.
1981-ம் ஆண்டு குஜராத் பேட்ஜ் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஹஸ்முக் ஆதியா, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் செயலாளராக பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.