எம்.பி.க்கள் தளவாடச் சாமான்கள் வாங்குவதற்கான நிதி ரூ.1 லட்சமாக அதிகரிப்பு

எம்.பி.க்கள் அலுவலகங்களுக்கு தளவாடச்சாமான்கள் வாங்குவதற்கான நிதியை 1 லட்சம் ரூபாயாக உயர்த்தி கேபினட் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
எம்.பி.க்கள் தளவாடச் சாமான்கள் வாங்குவதற்கான நிதி ரூ.1 லட்சமாக அதிகரிப்பு
Published on

புதுடெல்லி, பிப். 28-

பாராளுமன்றத்தில் நிதிமந்திரி அருண்ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்த போது எம்.பி.க்களின் அலவன்ஸ் மற்றும் இதர படிகள் ஒவ்வொரு 5 ஆண்டு களுக்கும் ஒரு முறை விலை வாசி உயர்வுக்கு ஏற்றபடி மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

அதன்படி எம்.பி.க்களுக்கான அலவன்ஸ் தற்போது ரூ.45 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாக அதிகரிக்க அரசு முடிவு செய்து உள்ளது. இதேபோல் எம்.பி.க்கள் தங்களது அலுவலகங்களுக்கான தளவாடங்கள் மரச்சாமான்கள் வழங்குவதற்கான நிதி ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

இன்று நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் எம்.பி.க்களுக்கான அலவன்ஸ் தொகையை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

ஏற்கனவே எம்.பி.க்களின் சம்பளம் ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதுவருகிற ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது. #TamilNews

X

Maalai Malar
www.maalaimalar.com