7-வது ஊதியக்குழு பரிந்துரைகள்: ஓய்வூதியத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஏழாவது ஊதியக்குழு அளித்த பரிந்துரைகளில், சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான திருத்தங்கள் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
7-வது ஊதியக்குழு பரிந்துரைகள்: ஓய்வூதியத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Published on

டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது.

சம்பதா என்ற புதிய திட்டம் மூலம் வேளாண் துறையை நவீனமாக்க ரூ6000 கோடி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஊதியம் மற்றும் ஓய்வூதிய பயன்கள் தொடர்பாக, ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் திருத்தம் கொண்டு வரவும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம் 2016-ம் ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்றவர்கள் பயன்பெறுவார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com