சிஏஏ விவகாரம்- அனுமதியின்றி போராடுவோரை கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக அனுமதியின்றி போராடுவோரை கைது செய்து அப்புறப்படுத்தும்படி ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை ஐகோர்ட்
சென்னை ஐகோர்ட்
Published on

சென்னை:

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பேரணி நடத்தி வருகின்றனர். 

தமிழகத்திலும் ஆங்காங்கே போராட்டங்கள் நீடிக்கின்றன. பல்வேறு பகுதிகளில் காவல்துறையிடம் உரிய அனுமதி பெறாமலேயே போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் திருப்பூரில் நடைபெற்றும் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனுமதியின்றி போராடுபவர்களை கைது செய்து அப்புறப்படுத்தும்படி காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com