ராஜஸ்தானில் விஷமிகள் கைவரிசை - மகாத்மா காந்தி சிலை சேதம்

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் விஷமிகள் கைவரிசை - மகாத்மா காந்தி சிலை சேதம்
Published on

ஜெய்ப்பூர்:

நாடு முழுவதும் தலைவர்கள் சிலைகள் தொடர்ச்சியாக உடைக்கப்பட்டு வருகின்றன. பல பகுதிகளில் பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள நத்வாரா பகுதியில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையினை மர்ம நபர்கள் இன்று சேதப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com