புதுக்கோட்டையில் தொழிலதிபர் தற்கொலை

புதுக்கோட்டையில் குடும்ப தகராறில் தொழிலதிபர் தற்கொலை செய்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
புதுக்கோட்டையில் தொழிலதிபர் தற்கொலை
Published on

திருவரங்குளம்:

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள தோப்புக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 54). இவர் புதுக்கோட்டையில் பெயிண்ட் கடை வைத்து நடத்தி வந்தார்.

இந்தநிலையில் குடும்ப தகராறு காரணமாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனிடையே நேற்று கணேசன் அவரது மகளுக்கு போன் செய்தார். அப்போது தான் புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் நிற்பதாகவும், எலி மருந்தை சாப்பிட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மகள் மற்றும் உறவினர்கள் புதுக்கோட்டைக்கு விரைந்து சென்று, கணேசனை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி கணேசன் இறந்தார். அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

குடும்ப தகராறில் கணேசன் தற்கொலை செய்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வல்லத்திராக் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com