வெளிநாட்டு மாணவியை கர்ப்பமாக்கிய தொழில் அதிபர் தந்தையுடன் கைது

லிதுவோனியா நாட்டைச் சேர்ந்த மாணவியை கர்ப்பமாக்கிய தொழில் அதிபரையும், அவரது தந்தையையும் போலீசார் கைது செய்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சென்னை:

லிதுவோனியா நாட்டைச் சேர்ந்த 22 வயது மாணவி ஒருவர் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், “தான் துபாயில் படித்தபோது சென்னை அமிஞ்சிகரையைச் சேர்ந்த தொழில் அதிபர் ருமையாஸ்அகமது என்னை காதலிப்பதாக கூறி நெருங்கி பழங்கினார். இதில் நான் கர்ப்பம் அடைந்தேன்.

இதையடுத்து என்னை சென்னை அழைத்து வந்து கருவை கலைத்தார். தற்போது திருமணம் செய்ய மறுத்து தொழில் அதிபரும், அவர் குடும்பத்தினரும் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

இதுபற்றி ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் விசாரணை நடத்தி பாலியல் புகாருக்கு உள்ளான தொழில் அதிபரையும், அவரது தந்தையையும் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com