தஞ்சை அருகே தொழிலதிபர் கொலை- மேலும் 4 பேர் கைது

தஞ்சை அருகே தொழிலதிபர் கொலை சம்பவத்தில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

கள்ளப்பெரம்பூர்:

தஞ்சை காயிதே மில்லத் நகரை சேர்ந்தவர் யூசுப்(வயது 45). இவரது மனைவி இலங்கையை சேர்ந்த அசிலா என்ற ரசியா(37). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். யூசுப் தஞ்சை விளார் சாலையில் வணிக வளாகத்துடன் கூடிய வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். அசிலா கணவரை பிரிந்து தனது குழந்தைகளுடன் திருச்சியில் வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காரில் சென்றபோது வல்லம் அருகே ஓட ஓட விரட்டி யூசுப் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இதையடுத்து திருச்சியில் இருந்த அசிலாவை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அசிலா, திருச்சி காந்தி மார்க்கெட் சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த பிரகாஷ்(25), திருச்சி மேக்குடியை சேர்ந்த சகாதேவன்(26) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய தஞ்சையை சேர்ந்த 4 பேரை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று தஞ்சை விளார் புதுப்பட்டினத்தை சேர்ந்த பார்த்திபன்(33), விளார் வடக்கு தோட்டத்தை சேர்ந்த காசி என்கிற பாலமுருகன்(32), பிள்ளையார்பட்டி லட்சுமி நகரை சேர்ந்த முருகேசன்(37), நாஞ்சிக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்த ராஜா(21) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய திருச்சியை சேர்ந்த 4 பேரை தேடிவருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com