தொழில் நஷ்டத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் தூக்குபோட்டு தற்கொலை

புதுவை முதலியார்பேட்டையில் தொழில் நஷ்டத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

புதுச்சேரி:

புதுவை முதலியார்பேட்டை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பாபு. ரியல் எஸ்டேட் அதிபர். இவருடைய மனைவி ரேகா (வயது 33). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் பாபு ரியல் எஸ்டேட் தொழில் செய்வதற்கு நிறைய பேரிடம் பணம் கடன் வாங்கி இருந்தார். ஆனால், அவர் போட்ட பிளாட் எதுவும் விற்பனை ஆகவில்லை. நிறைய நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் கடந்த ஒரு வாரமாக மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

நேற்று பாபு வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். குழந்தைகள் பள்ளிக்கு சென்று விட்டனர். மனைவி எப்போதும் போல் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் ரேகா மதியம் மற்றும் மாலையில் கணவருக்கு போன் செய்தார். அவர் போனை எடுக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்து வீட்டுக்கு வந்து பார்த்த போது பாபு மின் விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரேகா அலறினார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் இது குறித்து முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் வீரபத்திர சாமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com