சொகுசு பஸ் - லாரி மோதல்- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

சூளகிரி அருகே அதிகாலையில் சொகுசு பஸ் - லாரி மோதிய விபத்தில் 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியனர்.
சொகுசு பஸ் - லாரி மோதல்- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
Published on

சூளகிரி:

சென்னையில் இருந்து தனியார் சொகுசு பஸ் ஒன்று 30 பயணிகளை ஏற்றிக் கொண்டு பெங்களூரை நோக்கி புறப்பட்டது. பஸ்சானது கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கோபசந்திரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அதிகாலை 5 மணி அளவில் சென்ற போது, குஜராத்தில் இருந்து கிரானைட் சிலாப் ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரியை நோக்கி வந்து கொண்டிருந்த லாரி சாலையில் ஒரு திருப்பத்தில் திருப்பிய போது எதிர்பாராத விதமாக பலத்த சத்தத்துடன் பஸ் மீது மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.

பின்னர், அக்கம் பக்கத்தினர் காயமாடைந்த மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் லாரியை ஓட்டிய டிரைவர் இடிபாடுக்குள் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். அவரை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த பழனிசாமி (வயது 52) என்பது தெரியவந்தது. மேலும், இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 30 பயணிகளும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். 

X

Maalai Malar
www.maalaimalar.com