முசிறி அருகே பஸ்-லாரி மோதல்: 6 பேர் படுகாயம்

முசிறி அருகே பஸ்சும் லாரியும் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முசிறி அருகே பஸ்-லாரி மோதல்: 6 பேர் படுகாயம்
Published on

முசிறி:

அரியலூரில் இருந்து நாமக்கல் நோக்கி சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. முசிறி அருகே உமையாள்புரத்தில் சென்ற போது, திருச்சியில் இருந்து முசிறி நோக்கி சென்ற தனியார் பஸ் எதிர்பாராத விதமாக லாரியின் பின்னால் மோதியது. 

இதில் பஸ்சில் பயணம் செய்த சேலத்தை சேர்ந்த கலைசெல்வி, முருகன், முத்து, துவரங்குறிச்சி சேர்ந்த சக்திவேல், தொட்டியம் மணி, திருவையாறு சந்திரசேகர், ஆகிய 6 பேரும் காயமடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் முசிறி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து பஸ் டிரைவர் நாமக்கல் அடுத்த காளி செட்டிபட்டியை சேர்ந்த சுந்தரராஜன்(53) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com