வாணியம்பாடி அருகே பஸ் மோதி போலீஸ் ஏட்டு பலி

வாணியம்பாடி அருகே பஸ் மோதி போலீஸ் ஏட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நாட்டறம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி அருகே பஸ் மோதி போலீஸ் ஏட்டு பலி
Published on

வேலூர்:

வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது48). வாணியம்பாடி அடுத்த காவலூர் போலீஸ் நிலையில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இன்று காலை பார்த்திபன் வாணியம்பாடி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வெலக்கல் நத்தம் பகுதியில் சாலையில் தடுப்புவேலி அமைத்து அதில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கிருஷ்ணகிரி நோக்கி சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே பார்த்திபன் பரிதாபமாக இறந்தார். நாட்டறம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com