

ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேரூர் கிராமத்தை சேர்ந்த நல்லதம்பி (வயது 35). இவர் தனது உறவினரான முருகன் என்பவருடன் நேற்றிரவு 10 மணிக்கு ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து பேரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை நல்லதம்பி ஓட்டி சென்றார்.
அப்போது எதிரே தூத்துக்குடியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நல்லதம்பி, முருகன் ஆகிய இருவரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும் நல்லதம்பி சிகிச்சை பலனின்றி இறந்தார். முருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்கு பதிந்து அரசு பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews